Monday, February 7, 2011

கிரிக்கெட்டிலும் அரசியல்..............

மத்திய அமைச்சர் சரத் பவாருக்கும், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஜக்மோகன் டால்மியாவுக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம் தான். இருவருமே இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் பொறுப்பில் இருந்தவர்கள்.தற்போது, சர்வதேச கிரிக்கெட் சங்கத்தின் முக்கிய பொறுப்பில் சரத் பவார் இருக்கிறார். டால்மியா, மேற்கு வங்க மாநில கிரிக்கெட் சங்கத் தலைவராக உள்ளார். இருவருக்குமே வயதாகி விட்டாலும், தங்களுக்குள் உள்ள விரோதப் போக்கை கைவிட மறுக்கின்றனர். இருவருக்கும் இடையேயான கருத்து வேறுபாடு சமீபத்தில் கூட எதிரொலித்தது.கிரிக்கெட் வீரர்களின் சொர்க்கம் என அழைக்கப்படும் கோல்கட்டாவின் ஈடன் கார்டன் மைதானம், உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக தயாராகி வந்தது. சமீபத்தில் இந்த மைதானத்தை சர்வதேச கிரிக்கெட் சங்க அதிகாரிகள் ஆய்வு செய்தனர். "மைதான பணிகள் அரைகுறையாக இருப்பதால், இங்கு உலகக் கோப்பைக்கான இந்தியா - இங்கிலாந்து இடையேயான போட்டியை நடத்த அனுமதிக்க முடியாது' என, அவர்கள் கைவிரித்து விட்டனர். இந்த விவகாரம், மேற்கு வங்க கிரிக்கெட் சங்கத் தலைவர் ஜக்மோகன் டால்மியாவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது."என்னை பழி வாங்குவதற்காக சரத் பவார் செய்யும் சதி இது. கொழும்பு, மும்பையில் உள்ள மைதானங்களுக்கு எல்லாம், உலகக் கோப்பை போட்டிக்கு தயாராவதற்கு போதிய கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. ஈடன் கார்டன் மைதானத்துக்கு மட்டும் ஏன், இந்த நீதி மறுக்கப்படுகிறது' என, காதில் புகை வரும் அளவுக்கு புலம்புகிறார் டால்மியா.

No comments:

Post a Comment